Monday 29 July 2013

இணைய தளங்கள் மூலம் ஆபாச படம்,வீடியோ வெளியிடுதல் - 5 ஆண்டுகள் சிறை

இணையம் (Internet) மற்றும் அலைப்பேசியின் (MOBILE) தோற்றமும் அதன் துரித வளர்ச்சியும் நம்மை பிரமிக்க வைக்கின்றது.  பள்ளி செல்லும் மாணவனாயினும் சரி ஓய்வு பெற்ற வயோதிகராயினும் அவர்களின் அன்றாட வாழ்வில் தன்னை ஒரு தவிர்க்க முடியாத சாதனமாக இணையமும் அலைபேசியும் நிலை நிறுத்தி கொண்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.


              இந்த நவின தொழிட்நுட்பத்தின் வளர்ச்சி ஒரு பக்கம் பிரமிப்பூட்ட அதை பயன்ப்படுத்தி குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளின் எண்ணிக்கையும் மிக பயங்கரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது,இந்த குற்றவாளிகளின் கொடிய கைகள் அதிகமாக நெறிப்பது பெண்களையும் குழுந்தைகளையும் தான்.
பாலியல் இணைய தளங்கள் தங்களின் வளர்ச்சிக்காக பலிகடா ஆக்குவது 13 வயதிற்கு மேற்ப்பட்ட ஆண் பிள்ளைகளை தான்,இத்தகைய இணைய தளங்களின் வியாபார உத்தி சமுக இணைய தளங்களையே அதிகமாக குறிவைக்கின்றன

இணைய தளங்கள் மூலம் ஆபாச படம்,வீடியோக்களை வெளியிடுதல் மிக கடுமையான குற்றம் ஆகும்,அப்படி வெளியிட்டால் அவர்கள் சிறையில் 5 ஆண்டுகள் கம்பி எண்ண வேண்டியது தான் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.கடிதம், செல்போன் என தகவல் பரிமாறிய காலம் மாறி தற்போது இணைய தளத்தில் பேஸ்புக், ஆர்குட், டுவிட்டர் போன்ற சமுதாய இணைய தளங்கள் மூலம் தகவல்கள் வெளியிடப் பட்டு வருகின்றன.வாழ்த்து, பாராட்டு, விமர்சனம் என அனைத்தும் சமுதாய இணைய தளங்கள் மூலமே பெரும்பாலும் நடக்கிறது. பிரபல இந்தி நடிகர் அபிஷேக்பச்சன் தனது மகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று இணைய தளம் மூலம் கோரிக்கை விடுக்கிறார். இது ஒருபுறம் இருக்க நடிகர், நடிகைகள் பெயரில் போலி இணைய தளங்களும் வலம் வருகின்றன. அதில், மார்பிங் மூலம் ஆபாச படம் இணைக்கப்படுகிறது.

தற்போது, இணைய தளங்கள் மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் பலரும் போலியான தகவல்களை இணைய தளத்தில் பதிவு செய்து வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது.
இதன் மூலம் ஆபாச படம், காட்சி களை பகிர்ந்து கொள்ளும் சம்பவங்களும் நடக்கிறது. சிலர் பெயர், ஊர், முகவரி, புகைப்படம் உள்ளிட்டவைகளில் தங்களது இணைய தள முகவரியில் உண்மைக்கு புறம் பான தகவல்களை பதிவு செய்கின்றனர். அதனை நூற்றுக்கும் மேற்பட்டவர் கள் பார்த்து தொடர்பு கொள்கின்றனர். எனவே, இணைய தளம் மூலம் ஏமாறாமல் இளைஞர்களும், பெண் களும் தங்களை காத்துக் கொள்வது நல்லது.


இதுகுறித்து, சைபர் கிரைம் போலீஸ் உயர் அதி காரி ஒருவர் கூறுகையில், ‘‘இணைய தளம் மூலம் தகவல் பறிமாறிக்கொள்வது அதிகரித்து விட்டது. இது வளர்ச்சியை காட்டுகிறது. இருப்பினும் சிலர் பொய்யான தகவல்களை பதிவு செய்து பிறரை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். இது சட்டப்படி குற்றம். ஆபாச படங்கள், காட்சி களை பறிமாறிக் கொள்வது வெளிநாடுகளில் சட்ட பூர்வமாக அனுமதிக்கப் பட்டுள்ளது. ஆனால், இங்கு இதுபோன்ற செய லில் ஈடுபட்டால் முதல் முறை 5 ஆண்டுகள், தொடர்ந்து செய்து வந்தால் 7 ஆண்டுகள் சிறை தண் டனை உண்டு’’ என்றார்.

No comments:

Post a Comment