Saturday 13 July 2013

ஏமாற வேண்டாம்......


SPAM:உங்கள் இமெயில் ‏கணக்கிற்கு முன் பின் அறிமுகமில்லாதவர்களி டமிருந்து தினமும் உங்களுக்கு வேண்டாத ‏மெயில்களெல்லாம் வந்து குவிந்து உங்கள் மெயில் ‏‎பாக்ஸை நிரப்புவதைப் பார்த்திருப்பீர்கள்.நீங்கள் கேட்காமலேயே உங்களிடம் பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குவதற்கு வர்த்தக நோக்கில் வரும் இந்த வேண்டாத ‏மெயி‏ல்களையே ஸ்பாம் (spam) எனப்படுகிறது. வேண்டாத ‏ இந்தக் குப்பை மெயில் அனுப்புவோரை ஸ்பாமர் (spamer) எ‎ன்பர்.இந்த ஸ்பாம் எமக்கு நேர விரயத்தை ஏற்படுத்துவதோடு சில வேளைக ளில் வேண்டாத பிரச்சினைகளிலும் சிக்க வைத்து விடுகிறது.

 ஸ்பாம் மெயில்கள்:

• நம்ப முடியாத விலைக் கழிவுட (DISCOUNT SALES) பொருட்கள்
• ‏இழந்த இளமைபோ மீட்டுக் கொள்ள மருந்து மாத்திரைகள்
• பல்கலைக் கழகம் செல்லாமலேயே மற்றும் குறுகிய கால வெளி நாட்டு பட்டப் படிப்புச் சா‎‎‎ன்றிதழ்கள்
• மலிவு விலையில் கணினி மெ‎‎‎‎ன்பொருள்கள்
• இணையம் வழி சூதாட்டம் (ONLINE LOOTERY)
• குறுகிய காலத்தில் உங்களை குபேரனாக மாற்றும் திட்டம்
• மற்றும் ‎ சட்ட விரோத செயல்களுக்கு உதவுதல் போன்‎‎ற
தலைப்புகளை (subject) கொண்டிருக்கும். ‏ ‏இந்த தலைப்பைக் கொண்டே ‏ ‏இவை ஸ்பாம் அஞ்சல் எ‎ன்பதை அடையாளம் கண்டு கொள்ளலாம்.

இப்படி இணையத்தின் வழியாக வீட்டினுள் நுழைந்த இந்த கயவர்கள் இப்பொழுது அலைப்பேசி வழியாக நம் படுக்கையறைக்கும் வந்து விட்டார்கள்

குறுந்தகவல்கள் (SMS) :
மேற்க்கண்ட அனைத்து விஷயங்களும் இப்பொழுது குறுந்தகவல்களாக (SMS)  உங்கள் அலைப்பேசிக்கு வர ஆரம்பித்துள்ளது.

இந்த குறுந்தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.
 

No comments:

Post a Comment