Sunday 14 July 2013

சைபர் கிரைம் பாதுகாப்பு விதிமுறைகள் - தமிழக சைபர் கிரைம் போலிசார்

சைபர் கிரைம் தீமைகளில் இருந்து பாதுக்காத்து கொள்ள சில விதிமுறைகளை பின்பற்றும்படி தமிழக சைபர் கிரைம் போலிசார்
கூறியுள்ளனர் விவரங்கள் பின்வருமாறு,
  1. இன்டர்நெட்டை பயன்ப்படுத்தும் போது உங்களுடைய பயன்ப்பாட்டின் பெயரை (USER NAME),கடவு சொல்லை (PASSWORD)  ஆகியவற்றை ரகசியமாகவும்,சிறிது கடின கடவு சொல்லாக பயன்ப்படுத்துங்கள் அதாவது எழுத்து,எண்  மற்றும் சிறப்பு குறியீடு கலந்த (ALPHA, SPECIAL CHARACRTER AND NUMERIC COMBINATION PASSWORD) கடவு சொல்லை உருவாக்கி கொள்ளுங்கள்.
  2. உங்களுடைய அலைபேசி அல்லது மின்னஞ்சலுக்கு வரும் லாட்டரியில் பணம் விழுந்துள்ளது எனும் செய்தியை நம்பி பணம் கட்ட முயற்சிக்காதீர்.
  3. கடன் அட்டை மற்றும் வங்கி அட்டை எண்ணை உறுதிப்படுத்தப்பட்ட இணைய தளங்களில் மட்டும் பயன்படுத்துங்கள்.
  4. ONLINE NET BANK -ல் பணம் பரிமாற்றம் செய்வோர் மிகவும் கவனமாக LOGOUT செய்ய வேண்டும்,இணைய மையங்களில் (INTERNET CENTER) தயவு செய்து பண பரிமாற்றம் செய்ய வேண்டாம்
  5. போலி இணைய தளத்தை நம்பி உங்களுடைய விவரங்களை பதிவு செய்ய வேண்டாம்
  6. உங்களுடைய மின்னஞ்சல் மற்றும் அலைபேசிக்கு வரும் வேலை வாய்ப்பு செய்திகளை நம்பி பணத்தை கட்ட வேண்டாம்.
  7. சமூக வலை தளங்களில் (SOCIAL NETWORKING WESBSITES) உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள்,புகைப்படம்,தொலைபேசி மற்றும் அலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டாம்
  8. உங்களுடைய குழந்தைகள் இன்டர்நெட்டை உபயோகப்படுத்தினால் அவர்களை கண்கானியுங்கள்,தனி அறையில் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.
  9. உங்களுடைய கணினி அல்லது மடிக்கணினி ஒயர்லெஸ் (WI-FI) இணைப்பில் இருந்தால் அதற்கு கடவு சொல்லிட்டு (PASSWORD) உபயோகப்படுத்தவும்.
  10. உங்களுடைய கணினி அல்லது மடிக்கணினியில் ANTIVIRUS FIRWALL போட்டு கொள்ளவும்
  11. வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி,அதற்க்காக புதிய வங்கி கணக்கை ஆரம்பித்து அதன் எண் அண்ட் ரகசிய எண்ணை (PIN)அனுப்பும்படியும்,லாபத்தில் 10 சதவிதம் பணம் தருவதாக கூறுவதை நம்பி ஏமாற வேண்டாம் இதன் மூலம் உங்கள் கணக்கை அவர்கள் உபயோகப்படுத்தி இண்டெர் நெட் சம்பந்தப்பட்ட இணைய குற்றங்களில் (CYBER CRIMES) ஈடுபடலாம்.
  12. வெளி நாட்டு வேலை வாய்ப்புகள் என வரும் மின்னஞ்சல்களை நம்பி பணத்தை வங்கியில் செலுத்த வேண்டாம்,மேலும் உங்கள் கடவுசீட்டு எண் மற்றும் விவரங்களையும் (PASSPORT NUMBER AND DETAILS) தெரிவிக்க வேண்டாம்.

No comments:

Post a Comment