Friday 12 July 2013

தமிழ்நாடு சைபர் குற்றங்கள் விழிப்புனர்வு அமைப்பு

               தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பத்தின் அபரிமித வளர்ச்சி அன்றாட மனித வாழ்வில் தொழில் நுட்பத்தை ஓர் தவிர்க்க முடியாத அங்கமாக மாற்றியுள்ளது. இப் பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கமான இணையம் (Internet) மற்றும் அலைப்பேசியின் (MOBILE) தோற்றமும் அதன் துரித வளர்ச்சியும் நம்மை பிரமிக்க வைக்கின்றது.  பள்ளி செல்லும் மாணவனாயினும் சரி ஓய்வு பெற்ற வயோதிகராயினும் அவர்களின் அன்றாட வாழ்வில் தன்னை ஒரு தவிர்க்க முடியாத சாதனமாக இணையமும் அலைபேசியும் நிலை நிறுத்தி கொண்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

              இந்த நவின தொழிட்நுட்பத்தின் வளர்ச்சி ஒரு பக்கம் பிரமிப்பூட்ட அதை பயன்ப்படுத்தி குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளின் எண்ணிக்கையும் மிக பயங்கரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது,இந்த குற்றவாளிகளின் கொடிய கைகள் அதிகமாக நெறிப்பது பெண்களையும் குழுந்தைகளையும் தான்.

            இது வளரும் சமுகத்தின் மீது மறைமுகமாக ஏவப்படும் சமூக தீவிரவாதம் (Social Terrorism). இந்தியா போன்று வளரும் நாடுகளின் பொருளாதாரம்,மொழி,கலாச்சாரம் போன்றவற்றை கங்கனம் கட்டி கொண்டுஅழிக்க முயன்று கொண்டிருக்கிறார்கள் சிலர்.

            2012 ஆண்டு இறுதியில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் சராசரியாக ஒரு நாளில் 1.15 லட்சம் இந்தியர்கள் சைபர் குற்றங்களால் பாதிக்கபடுக்கின்றனர்,குறைந்த பட்ச்ம் ஒரு நிமிடத்திற்கு 80 இந்தியர்களும் வருடத்திற்கு 50000 கோடி ரூபாய் இந்தியாவிற்கு பொருளாதார இழப்பு ஏற்படுவதாகவும் அக்கணக்கெடுப்பில் தெரிய வருகிறது.இது வெறும் இந்தியாவிற்கான அச்சுறுத்தல் மட்டும் அல்ல தகவல் தொழிட் நுட்ப உலக்த்தில் தன்னை ஜாம்பவனாக காட்டி கொள்ளும் அமெரிக்காவிற்க்கு இதை விட மோசமான நிலைமை.

இணைய குற்றங்கள் (CYBER CRIMES):

Hacking (ஊடுருவல்): குறிப்பிட்ட சில நிரல்களை (Programs) பயன்ப்படுத்தி இணையத்தளங்கள் மற்றும் கணினிகளில் உள்ள தகவல்களை திருடவும் அல்லது சேதப்படுத்தவும்,இயங்கு தளத்தில் உள்ள  பாதுக்காப்பு பகுதிகளை கண்டுபிடித்து குறிப்பிட்ட இணைய தளம் அல்லது கணீனியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுகிறார்கள்.இவ்வித தாக்குதலுக்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ, மின்னணு சாதனங்களில் ஜாம்பவனாக திகழும் சோனி(Sony)யும்,கொடுங்கோலன் ராஜபக்‌ஷே சிங்கள அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு இணையம் (WWW.NATIONAL SECURITY.LK) எதுவும் தப்பவில்லை.

CYBER STALKING :சைபர் ஸ்டாக்கிங் மிகவும் மோசமான ஒன்று, இன்று பலரும் இந்த சைபர் ஸ்டாக்க்கிங்கில் சிக்கி அவதி படுகின்றனர்,நம்மை அறியாமலே நிழலாக நம்மை பின் தொடரும் ஆபத்து, நம்முடைய ஆர்வ கோளாறே இத்தகைய நபர்கள் நம்மை தொடர செய்கின்றோம்,குறிப்பாக பெண்களின் புகைப்படங்கள் திருடப்பட்டு வேறோரு பெண்ணின் உடலோடுபொருத்தி பாலியல் இணைய தளங்களுக்கு விளம்பரம் தேடுவது, வக்கிர புத்தி கொண்டு நபர்கள் மாற்றம் செய்யப்பட்ட இப்படங்களை இனையத்தில் உலவ விட்டு மகிழ்ச்சி அடைவது.பாலியல் ரீதியான தொல்லைகள் சாட்டிங் என்ற பெயரில் ஆரம்பிக்கும் இந்த இணைய நட்புகள் நம் வாழ்க்கையே நாசாமாக்கு தவறான வழிக்கு கொண்டு செல்கிறது. அதுமட்டுமின்றி காதலன் என்ற பெயரில் வக்கிர வெறிபிடித்த கயவர்கள் பெண்களை ஆபாசமாக படம்பிடித்து அதனை இணையத்தில் வெளியிடுகிறார்கள். மேலும் அதனைக் கொண்டே பெண்களை மிரட்டி வருகிறார்கள்.

PHONOGRAPHY:பாலியல் இணைய தளங்கள் தங்களின் வளர்ச்சிக்காக பலிகடா ஆக்குவது 13 வயதிற்கு மேற்ப்பட்ட ஆண் பிள்ளைகளை தான்,இத்தகைய இணைய தளங்களின் வியாபார உத்தி சமுக இணைய தளங்களையே அதிகமாக குறிவைக்கின்றன,இதில் அதிகமாக பாதிக்கபடுவது பெண்களும்,மாணவர்களும் தான்.இவற்றைவிட கொடியது, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள்.

INTERNET RELAY CHAT CRIME:இந்த வகை சாட்டின் மூலம் தான் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் நடத்தப்படுகின்றன்.தங்களை சம வயதுள்ள குழந்தைகளாக அறிமுக செய்து கொண்டு சாட் செய்ய ஆரம்பிக்கும் இந்த வக்கிர புத்திக்காரர்கள் விஷமாக தங்களிடம் உள்ள ஆபாச புகைப்படங்களை பகிர்ந்து அந்த பிஞ்சு மனதில் நஞ்சை கலக்கின்றனர்,இன்னும் சிலர் அந்த குழந்தைகளிடம் நெருங்கி பழகி பிறந்த நாளுக்கு பரிசு அனுப்புவதாக சொல்லி அல்லது வேறு ஒரு காரணத்தை சொல்லியோ வீட்டு முகவரி மற்றும் வீட்டில் உள்ளவர்களின் விவரங்களை தெரிந்து கொள்கின்றன்ர்.

CREDIT AND DEBT CARD FRAUD:கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் இணையத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்பொழுது, கடவுச்சொல் உள்பட கணக்கு விவரங்களை திருடுவது.

NET EXTORTION :வளர்ந்த தொழில் நிறுவனத்தின் தகவல் தளத்தை (DATABASE) கைப்பற்றி பணம் பறித்தல்.

SPAM:உங்கள் இமெயில் ‏கணக்கிற்கு முன் பின் அறிமுகமில்லாதவர்களி டமிருந்து தினமும் உங்களுக்கு வேண்டாத ‏மெயில்களெல்லாம் வந்து குவிந்து உங்கள் மெயில் ‏‎பாக்ஸை நிரப்புவதைப் பார்த்திருப்பீர்கள்.நீங்கள் கேட்காமலேயே உங்களிடம் பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குவதற்கு வர்த்தக நோக்கில் வரும் இந்த வேண்டாத ‏மெயி‏ல்களையே ஸ்பாம் (spam) எனப்படுகிறது. வேண்டாத ‏ இந்தக் குப்பை மெயில் அனுப்புவோரை ஸ்பாமர் (spamer) எ‎ன்பர்.இந்த ஸ்பாம் எமக்கு நேர விரயத்தை ஏற்படுத்துவதோடு சில வேளைக ளில் வேண்டாத பிரச்சினைகளிலும் சிக்க வைத்து விடுகிறது.

மாதிரி ஸ்பாம் மெயில்கள்:

• நம்ப முடியாத விலைக் கழிவுட (DISCOUNT SALES) பொருட்கள்
• ‏இழந்த இளமைபோ மீட்டுக் கொள்ள மருந்து மாத்திரைகள்
• பல்கலைக் கழகம் செல்லாமலேயே மற்றும் குறுகிய கால வெளி நாட்டு பட்டப் படிப்புச் சா‎‎‎ன்றிதழ்கள்
• மலிவு விலையில் கணினி மெ‎‎‎‎ன்பொருள்கள்
• இணையம் வழி சூதாட்டம் (ONLINE LOOTERY)
• குறுகிய காலத்தில் உங்களை குபேரனாக மாற்றும் திட்டம்
• மற்றும் ‎ சட்ட விரோத செயல்களுக்கு உதவுதல் போன்‎‎ற
தலைப்புகளை (subject) கொண்டிருக்கும். ‏ ‏இந்த தலைப்பைக் கொண்டே ‏ ‏இவை ஸ்பாம் அஞ்சல் எ‎ன்பதை அடையாளம் கண்டு கொள்ளலாம்.

இப்படி இணையத்தின் வழியாக வீட்டினுள் நுழைந்த இந்த கயவர்கள் இப்பொழுது அலைப்பேசி வழியாக நம் படுக்கையறைக்கும் வந்து விட்டார்கள்.

பிரமிப்பூட்டும் வளர்ச்சி கொண்ட இந்த தொழிட் நுட்பத்தின் இப்படியொரு கோர பிடியிலிருந்து நம் சமுதாயத்தை காப்பது எப்படி?

அறிவியல் மற்றும் தொழிட் நுட்ப வளர்ச்சியில் ஆபத்து இல்லாத சாதனம் எனபது எதுவும் இல்லை அன்றாடும் பயன்ப்படுத்தும் மின்சாரம்,தொலைக்காட்சி,வாகனங்கள்,அடுப்பு என அனைத்தும் ஆபத்தானவையே,மின்சாரத்தை பயன்படுத்தும் போதோ அல்லது எரிவாயு அடுப்பை பயன்ப்படுத்து போதோ எப்படி பாதுக்காப்புடன் விழிப்புனர்வுடன் கொடுக்கப்பட்ட விதிகளை செயல்படுகிறோமோ அதே போல் அலைப்பேசி மற்றும் கண்னிகளை முறையான செக்யுரிட்டி மென் பொருட்கள் மற்றும் சமுக வலைத்தளங்களில் உள்ள செக்யுரிட்டி வளையத்தை  மாதம் ஒரு முறையேனும் சீர்தூக்கி கட்டமைத்து கொண்டு பயன்ப்படுத்தினால் மேற்க்கண்ட சைபர் கயவர்களிடம் இருந்து உங்களை காப்பாற்றி கொள்ளலாம்.

சைபர் குற்றங்களிலிருந்து எப்படி நம்மை தற்காத்து கொள்வது? என்ன மாதிரியான மென் பொருட்களை பயன்ப்படுத்துவது? எப்படி செக்யுரிட்டி வளையத்தை பலப்படுத்தி கொள்வது,சைபர் குற்றங்களை பதிவு செய்ய யாரை அனுகவது என தெளிவாக ஒவ்வொரு நாளும் காண்போம்.


2 comments:

  1. Very nice. It it is very useful for internet user.

    ReplyDelete
    Replies
    1. Thanks Mr.Vadivelu...we need all of your support for TANCCAO

      Delete